வினா விடை · பொதுத் தமிழ்
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சநிகர்” என்று பாடியவர் யார்?
சரியான விடை: (A) கம்பர்
விளக்கம்: இவ்வரிகள் கம்பராமாயணம் ஆரணிய காண்டம் சூர்ப்பணகைப் படலத்தில், அழகிய பெண் வடிவில் வந்த சூர்ப்பணகையின் மென்மையான பாதங்களை வருணிக்கின்றன. சந்த நயம் மிக்க பாடல்களால் கம்பர் ‘கவிச்சக்கரவர்த்தி’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “மீதெலாம் எண்கொண்ட தொண்ணூற்றின் மேலும் இருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலன்” யார்?விடை: விசயாலயன்
- சொற்பொருள் தருக: ‘மழவிடை’விடை: இளங்காளை
- “நாடகசாலை யொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ” என்று பாடியவர்விடை: கவிமணி
- உலா இலக்கியம் இந்த பா வகையில் இயற்றப்படும்விடை: கலிவெண்பா
- தமிழக அரசு வழங்கிய ‘பாவேந்தர் நினைவுப் பரிசினைப்’ பெற்ற முதல் நபர்விடை: கவிஞர் சுரதா
- “வலவன் ஏவா வானவூர்தி” – இத்தொடர் இடம்பெறும் புறநானூற்றுப் பாடல் எண்ணும் அடி எண்ணும்விடை: 27:8
- தமிழகத்தின் ‘வேர்ட்ஸ்வொர்த்’ என்று<br />அழைக்கப்படுபவர்விடை: வாணிதாசன்
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை எந்த ஆதீனத்தின் வித்துவானாகப் பணிபுரிந்தார்?விடை: திருவாவடுதுறை ஆதீனம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
