வினா விடை · பொதுத் தமிழ்
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” இப்பாடலில் எவ்வகை
அணி அமைந்துள்ளது.
சரியான விடை: (D) பிறிது மொழிதல் அணி
விளக்கம்: “பீலிபெய் சாகாடும் அச்சிறும்” என்ற குறள் (475), மயிலிறகு ஏற்றிய வண்டியும் அளவு மீறினால் அச்சு முறியும் என்று கூறி, வலிமை அறியாமல் செயல்படுதல் தீது என்ற கருத்தைப் பிறிதொன்றின் மூலம் உணர்த்துவதால் பிறிது மொழிதல் அணி. கூற வந்த கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் வேறொன்றைக் கூறி விளக்குவதே இவ்வணி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவிலேயே முதன்முறையாக ................ அரசுதான் 1948ஆம் ஆண்டு சென்னைப் பொதுநூலகச் சட்டத்தை இயற்றி, நூலகப் பணிகளின் சீரான செயல்பாட்டிற்கு வித்திட்டது.விடை: தமிழ்நாடு
- தமிழ் மொழியின் ‘உபநிடதம்’ என்று போற்றப்படும் நூலின் ஆசிரியர்?விடை: தாயுமானவர்
- “காலே பரிதப்பினவே கண்ணே,
நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்ற
பாடல் வரி இடம் பெற்ற நூல்விடை: குறுந்தொகை
- பொருத்துக:
சொல் – பொருள்
a) நறை – 1) மணம்
b) கோடிகம் – 2) பொந்து
c) புடை – 3) ஆடை
d) கடி – 4) தேன்
(a b c d)விடை: 4 3 2 1
- ‘மனோன்மணீயம்’ நூலில் வரும் துணைக்கதையின் பெயர்?விடை: சிவகாமி சரிதம்
- “ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி;
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே”
இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?விடை: முக்கூடற்பள்ளு
- ‘எட்டுத்தொகை’ நூல்களுள் புறப்பொருள் இலக்கியமாகத் திகழும் நூல்கள்விடை: புறநானூறு, பதிற்றுப்பத்து
- பகுபத உறுப்பிலக்கணத்தில் ‘எதிர்மறை
இடைநிலைகளாக’ வருபவைவிடை: ஆ, அல், இல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups