Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பிள’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (D) பிளந்து
விளக்கம்: பிள என்னும் வேர்ச்சொல்லிலிருந்து வினையை எதிர்பார்த்து நிற்கும் வினையெச்சம் பிளந்து ஆகும். பிளந்த பெயரெச்சம், பிளத்தல் தொழிற்பெயர், பிளந்தார் வினைமுற்று ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “சமணர் போற்றும் தெய்வம் அருகன்”.விடை: சமணர் போற்றும் தெய்வம் யார்?
  2. ‘பார்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: பார்த்தவர்
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. “நல்லவர் நட்பு பிறை போல் வளரும் என்கிறார் திருவள்ளுவர்”.விடை: நல்லவர் நட்பு குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது?
  4. ‘எழு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க.விடை: எழுந்தான்
  5. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. <br />“எதற்கும் அஞ்சாமல் ஏறு போல் நடக்க வேண்டும்”.விடை: எப்படி நடக்க வேண்டும்?
  6. ‘கெடு’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: கெடுதல்
  7. ‘மாநகர்’–என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: உரிச்சொற்றொடர்
  8. ‘செல்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: செல்லல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions