வினா விடை · பொதுத் தமிழ்
பிழையற்ற தொடர் எது?
சரியான விடை: (A) பத்துப்பழத்தில் ஒரு பழமே நல்லது
விளக்கம்: எழுவாய் 'ஒரு பழம்' ஒருமை என்பதால் பயனிலையும் ஒருமையில் 'நல்லது' என வர வேண்டும். 'நல்லவை', 'நல்லன' ஆகியவை பன்மை வடிவங்கள்; எண் இயைபு இல்லையெனில் வழுவாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'செம்புலப் பெயல்நீர் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: சேர்ந்ததன் தன்மையாதல்
- செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: பாடம் என்னால் படிக்கப்பட்டது
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'அடக்கம் அமரருள் உய்க்கும்'விடை: எது அமரருள் உய்க்கும்?
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: பாண்டியன் பாடலைப் பாடிக் கொண்டிருந்தான்
- 'Cashier' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: காசாளர்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: கடல், தந்தம், பட்டம், மனிதன்
- 'Rhombus' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: சாய்சதுரம்
- 'மரம் முறிந்தது' – இதில் உள்ள பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பொருட் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
