வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நாலந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீனப் பயணி யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காகக் காஞ்சிக்கு வந்திருந்தார். 2. புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களில் காஞ்சியும் ஒன்று என்று இவர் குறிப்பிடுகிறார்.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: நாலந்தாவில் பயின்ற சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்தார். புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு புனிதத் தலங்களில் காஞ்சியும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டதாகப் பாடநூல் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாலமோன் அரசர் முத்துகளை இறக்குமதி செய்த உவரி எந்தத் துறைமுகத்துக்கு அருகில் உள்ளது?விடை: கொற்கை
- எந்த நகரை சுற்றிலும் இருந்த அகழியில் யானைகள் கூட செல்லும் அளவுக்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன?விடை: மதுரை
- சாலமோன் என்பவர் எந்த நாட்டு அரசர்?விடை: இஸ்ரேல்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொண்டை நாட்டில் மிகப் பழமையான நகரம் மாமல்லபுரம். தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்ற சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள்.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாளங்காடி என்பது பகல் பொழுது அங்காடி. அல்லங்காடி என்பது இரவு பொழுது அங்காடி.விடை: இரண்டும் சரி
- பள்ளி என்ற வார்த்தை எந்த மதத்தோடு தொடர்புடையது?விடை: சமண மதம்
- எந்த நகரில் இருந்து மதுரைக்கு அகில் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன?விடை: தொண்டி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை மதுரையில் கழித்தார்.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
