வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. 2. பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் சேரும் தொடர்களில் இடையில் வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை முதலியவற்றின் உருபுகள் மறைந்து வருவது தொகைநிலைத் தொடர்.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று 'ஆகிய' உருபு மறைவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை (மல்லிகைப்பூ). பெயரோடு பெயரோ வினையோ சேரும் தொடரில் உருபுகள் மறைந்து வருவது தொகைநிலைத் தொடர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: சிலப்பதிகாரம்
- இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?விடை: சிலேடை அணி
- தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?விடை: ஐம்பெருங்காப்பியங்கள்
- பொருத்துக (சொல் - பொருள்): (a) சிவல் (b) சுவல் (c) அவல் (d) செய்யுள் — (1) பள்ளம் (2) செந்நிலம் (3) யாப்பு (4) மேட்டு நிலம்விடை: 2 4 1 3
- பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) குயில்பாட்டு (b) அதோ அந்தப் பறவை போல (c) உலகின் மிகச்சிறிய தவளை (d) ஒன்றே உலகம் — (1) ச. முகமது அலி (2) தனிநாயக அடிகள் (3) பாரதியார் (4) எஸ். ராமகி...விடை: 3 1 4 2
- “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” – என்றவர்?விடை: தண்டி
- கொழுந்தாடை என்பது யாது?விடை: கரும்பின் நுனிப்பகுதி
- தானியங்களுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?விடை: கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
