வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை; இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை. கூற்றுகளில் இரண்டும் இடம் மாறி உள்ளதால் இரண்டும் தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆகுபெயரைக் கண்டறிக? தமிழரசி வள்ளுவரைப் படித்தாள்.விடை: கருத்தாவாகு பெயர்
- ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயங்கள் ?விடை: எதுகை, மோனை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும். தொல்காப்பியர் ஆகுபெயர்கள் 8 வகைப்படும் என வகுத்துள்ள...விடை: 1 மட்டும் சரி
- ஆகுபெயரைக் கண்டறிக? மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது.விடை: இடவாகு பெயர்
- வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள தொடைநயம்.விடை: இயைபு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும். இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்கூறு...விடை: இரண்டும் சரி
- ஆகுபெயரைக் கண்டறிக? குழந்தை வற்றல் தின்றது.விடை: தொழிலாகு பெயர்
- திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயம்?விடை: எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
