வினா விடை · பொதுத் தமிழ்
சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?
சரியான விடை: (A) 3
விளக்கம்: உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என மூன்று காண்டங்களை உடையது. இது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கேழல்’ என்பதன் பொருள் யாது?விடை: பன்றி
- மாணிக்கவாசகர் பாண்டியனுக்காக எதை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறை இறைவனின் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டார்?விடை: குதிரை
- திருநாவுக்கரசரின் “நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் பாடல் எந்தக் கவிஞரை “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது?விடை: பாரதியார்
- திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 658
- செயப்பாட்டுவினை வாக்கியம் எது?விடை: வாணியால் பாடல் பாடப்பட்டது
- “உலக வரலாற்றிலேயே மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை” என்றவர் யார்?விடை: ஜி.யு.போப்
- எவ்வகை வாக்கியம் என அறிக: “சேக்கிழார் பக்தி உணர்வை வளர்த்தார்”விடை: தனிவாக்கியம்
- ஏலாதி என்னும் மருந்தில் ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு ஆகியவற்றுடன் சேரும் ஆறாவது பொருள் எது?விடை: திப்பிலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
