வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
x + 1/x = 2 எனில் x³ + 1/x³-இன் மதிப்பு
சரியான விடை: (D) 2
விளக்கம்: x + 1/x = 2 என்பதை நிறைவு செய்யும் ஒரே மெய்யெண் x = 1. எனவே x³ + 1/x³ = 1 + 1 = 2; (x + 1/x)³ − 3(x + 1/x) = 8 − 6 = 2 என்ற சூத்திரமும் இதையே தருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தனிவட்டி முறையில் ஒரு தொகை 25 ஆண்டுகளில் மூன்று மடங்காகிறது எனில் ஆண்டு வட்டிவீதம்விடை: 8%
- ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 10%, 20% தொடர் தள்ளுபடிகளுக்குப் பின்னர் ₹5760-க்கு விற்கப்படுகிறது எனில் அதன் குறித்த விலைவிடை: ₹8000
- ஒரு நிகழ்வெண் பரவலில் இடைநிலை 23, சராசரி 22.5 எனில் முகடுவிடை: 24
- 10 செ.மீ உயரமும், 12 செ.மீ, 8 செ.மீ அளவுள்ள இணைபக்கங்களும் கொண்ட சரிவகத்தின் பரப்புவிடை: 100 ச.செ.மீ
- இருபது விவரங்களின் சராசரி 15.8. இவற்றுடன் ஒரு புதிய மதிப்பைச் சேர்க்கும்போது சராசரி 0.4 அதிகரிக்கிறது எனில் சேர்க்கப்பட்ட புதிய மதிப்புவிடை: 24.2
- 35 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவத் தாமிரக் கம்பி சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் சதுரத்தின் பக்கம் (π = 22/7)விடை: 55 செ.மீ
- முதல் இருபது இயல் எண்களிலிருந்து ஓர் எண் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 2/5
- ஓர் இயந்திரத்தின் விலை இரு கடைகளிலும் ₹700. முதல் கடையில் 30%, 6% தொடர் தள்ளுபடியும், இரண்டாம் கடையில் 20%, 16% தொடர் தள்ளுபடியும் தரப்படுகின்றன எனில் இரண்டு கடைகளிலும் தரப்படும் த...விடை: ₹9.80
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
