வினா விடை · TET – கணிதம்
(x + a) என்பது x⁴ − a²x² + 3x − 6a என்ற பல்லுறுப்புக் கோவையின் காரணி எனில், a-இன் மதிப்பு
சரியான விடை: (D) 0
விளக்கம்: x + a காரணி எனில் x = −a பதிலிட மதிப்பு பூஜ்ஜியம்: a⁴ − a⁴ − 3a − 6a = −9a = 0, எனவே a = 0. இது காரணித் தேற்றத்தின் (Factor Theorem) பயன்பாடு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தற்போது தாயின் வயது மகளின் வயதைப் போல் மூன்று மடங்கு. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகளின் வயதைப் போல் இரு மடங்கு எனில், தற்போது மகளின் வயது (ஆண்டுகளில்)விடை: 12
- 4 பேர் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து 4 நாள்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 பேர் ஒரு நாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாள்களில் அவ்வேலையை முடிப்பார்கள்?விடை: 1 நாள்
- 12, 18, 21, 28 ஆகியவற்றால் வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 3 தரும் மிகப்பெரிய நான்கிலக்க எண்விடை: 9831
- 6 இயந்திரங்கள் ஒரு வேலையை 60 மணி நேரத்தில் முடிக்கின்றன. 15 இயந்திரங்கள் வேலை செய்தால் எத்தனை மணி நேரத்தில் அதே வேலை முடியும்?விடை: 24
- A என்ற பொருளின் விலை, B என்ற பொருளின் விலையை விட 25% குறைவு எனில், B-யின் விலை A-யின் விலையை விட எத்தனை சதவீதம் அதிகம்?விடை: 33⅓%
- 10 ஆட்கள் ஒரு வேலையை முடிக்க 8 நாள்கள் தேவைப்பட்டால், அவ்வேலையை ½ நாளில் முடிக்கத் தேவையான ஆட்கள்விடை: 160
- அருண் தனது முதலீட்டில் 65% இயந்திரங்களுக்கும், 20% கச்சாப் பொருட்கள் வாங்கவும் செலவழித்தது போக மீதம் ரூ.1305 இருப்பு வைத்துள்ளார் எனில், அவர் செலவழித்த தொகைவிடை: ரூ.7395
- ஒரு கடிகாரம் ஒவ்வொரு மணிக்கும் அந்த மணியின் எண்ணிக்கை அளவு முறை அடிக்குமானால், 12 மணி நேர முழுச் சுற்றில் மொத்தம் எத்தனை முறை அடிக்கும்?விடை: 78
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
