வினா விடை · பொதுத் தமிழ்
‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்’ – மோனைத் தொடையை எடுத்தெழுதுக.
சரியான விடை: (B) குன்றம் – குளிர்மழை
விளக்கம்: குன்றம், குளிர்மழை ஆகிய இரு சீர்களும் ‘கு’ எனத் தொடங்குவதால் மோனைத்தொடை அமைகிறது. ‘கா’ என்பது ‘கு’ எழுத்துக்கு இனமல்லாததால் காத்தவன் மோனையாகாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்’ – சீர்மோனையைச் சுட்டுக.விடை: உள்ளிய – உடனெய்தும்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘குடிப்பிறந்தார்’விடை: ஏழாம் வேற்றுமைத் தொகை
- ‘அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை’ – சீர் இயைபினைக் கண்டறிக.விடை: அஞ்சாமை – எஞ்சாமை
- இலக்கணக் குறிப்பு தருக: ‘கயல்விழி வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
- ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அளவு கடந்த ஆசை
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மல்லல்’விடை: உரிச்சொல்
- ‘கண்ணை இமை காப்பது போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: பாதுகாப்பு
- இலக்கணக் குறிப்பு தருக: ‘வாங்குவில்’விடை: வினைத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
