Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஞால்’ என்பதன் பொருள்

சரியான விடை: (D) தொங்குதல்
விளக்கம்: ‘ஞால்’ என்ற சொல்லுக்குத் தொங்குதல் என்பது பொருள்; ‘ஞாலுதல்’ என்ற வினையும் தொங்குதலையே குறிக்கும். ‘ஞாலம்’ என்ற சொல் உலகம் என்ற பொருளுடையது; இரண்டையும் குழப்பக் கூடாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல் எது?விடை: திருக்கோவையார்
  2. “திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்விடை: பரிதிமாற்கலைஞர்
  3. “எம்.ஜி.இராமச்சந்திரன் திரைவானில் கொடிகட்டிப் பறந்தார்” – இந்த மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: தனிப்புகழோடு விளங்குதல்
  4. “தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” எனப் பாடியவர்விடை: வள்ளலார்
  5. அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரில் தண்ணீர்ப் பந்தல் அமைத்த இடம்விடை: திங்களூர்
  6. கம்பராமாயணத்தில் குகனின் நகரமாகக் கூறப்படும் ‘சிருங்கிபேரம்’ என்பதுவிடை: கங்கைக் கரையோர நகரம்
  7. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபொழுது ______ வருகைக்காகக் காத்திருந்தான்.விடை: பிசிராந்தையார்
  8. மீமிசைச் சொல் அல்லாதது எது?விடை: மேல்கீழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions