வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: a) பாண்டம் பாண்டமாக b) வாயிலும் சன்னலும் c) போக்குக d) பிடிபசி — 1. எண்ணும்மை 2. ஆறாம் வேற்றுமைத்தொகை 3. அடுக்குத்தொடர் 4. வியங்கோள் வினைமுற்று
சரியான விடை: (A) a-3, b-1, c-4, d-2
விளக்கம்: பாண்டம் பாண்டமாக அடுக்குத்தொடர், வாயிலும் சன்னலும் எண்ணும்மை, போக்குக வியங்கோள் வினைமுற்று, பிடிபசி ஆறாம் வேற்றுமைத்தொகை. பிடிபசி என்பது பிடியினது பசி என விரியும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: உவமை அணி
- தமிழ் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தரும் என்று கூறியவர்?விடை: பிசிராந்தையார்
- ஆகுபெயரைக் கண்டறிக? நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.விடை: எண்ணலளவையாகு பெயர்
- பொருத்துக: a) மா முன் நேர் b) விள முன் நிரை c) மா முன் நிரை d) காய் முன் நேர் — 1. இயற்சீர் வெண்டளை 2. நேரொன்றாசிரியத்தளை 3. வெண்சீர் வெண்டளை 4. நிரையொன்றாசிரியத்தளைவிடை: a-2, b-4, c-1, d-3
- ‘நசை பெரிது’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?விடை: தலைவியிடம் தோழி கூறியது
- எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே என்ற வரிகள் யாருடையது?விடை: வள்ளலார்
- ஆகுபெயரைக் கண்டறிக? கலைச்செல்வி பச்சை உடுத்தினாள்.விடை: பண்பாகு பெயர்
- எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்களை தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர்?விடை: தாய்லாந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
