வினா விடை · TET – கணிதம்
சில ஆட்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிக்கின்றனர். அதைப்போல் இருமடங்கு ஆட்கள் அதே வேலையின் பாதியை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
சரியான விடை: (C) 3
விளக்கம்: ஆட்கள் இருமடங்கானால் நாட்கள் பாதியாகும் (6), வேலை பாதியானால் மேலும் பாதி: 12 × ½ × ½ = 3 நாட்கள். ஆட்கள்–நாட்கள் எதிர் விகிதம், வேலை–நாட்கள் நேர் விகிதம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- a = 4.36, b = 2.39, c = 1.97 எனில் a³ − b³ − c³ − 3abc -ன் மதிப்பு என்ன?விடை: 0
- 31, 29, 24, 22, 17, … இத்தொடரின் அடுத்த எண் எது?விடை: 15
- 8 லிட்டர் தண்ணீர் கொள்ளும் ஒரு கனச்சதுரப் பாத்திரத்தின் பக்க நீளம் எவ்வளவு?விடை: 20 செ.மீ.
- ஒரு வியாபாரி வாங்கிய விலையைவிட 40% அதிகமாக விலை குறிக்கிறார். பின்பு 15% தள்ளுபடி கொடுக்கிறார் எனில், லாப சதவீதம் என்ன?விடை: 19%
- கூட்டு வட்டி முறையில் ஓர் அசல் முதல் ஆண்டு முடிவில் ₹650 ஆகவும், இரண்டாம் ஆண்டு முடிவில் ₹676 ஆகவும் ஆகிறது எனில், அசல் எவ்வளவு?விடை: ₹625
- அடுத்தடுத்து வரும் 7 இயல் எண்களின் சராசரி 20 எனில், அவற்றில் மிகப்பெரிய எண் எது?விடை: 23
- 2x − y ≥ 1 என்ற அசமன்பாட்டை நிறைவு செய்யாத புள்ளி எது?விடை: (0,1)
- 3m² + 16m + 16 உடன் கீழ்க்கண்டவற்றில் எதைக் கூட்டினால் முழு வர்க்கம் கிடைக்கும்?விடை: m²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
