வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
வானவரம்பர்,வில்லவர் போன்ற விருதுப்பெயர்கள் எந்த மன்னர்களுடையது?
சரியான விடை: (A) சேரர்
விளக்கம்: வானவரம்பன், வானவன், வில்லவர், குட்டுவன், இரும்பொறை, பொறையன் ஆகியவை சேர மன்னர்களின் பட்டப்பெயர்கள். சேரர்களின் கொடியில் வில் சின்னம் இருந்ததால் 'வில்லவர்' எனப்பட்டனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் வென்ற சோழ மன்னன்விடை: கரிகாற்சோழன்
- ‘ஜீனர்’ என்பவர்விடை: ஆசைகளை வென்றவர்
- கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டு ..................... ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.விடை: சேர
- மெளரிய வம்சத்தின் இறுதி அரசர்விடை: பிரகத்ரதன்
- காளிதாசரின் படைப்பு அல்லாதது எது?விடை: முத்ராராட்சசம்
- முதலாம் சந்திரகுப்தர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?விடை: மகாராஜாதிராஜா
- லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தனது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்விடை: சந்திரகுப்தர் I
- 'இந்திய நெப்போலியன்' என்று அழைக்கப்பட்டவர்விடை: சமுத்திரகுப்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
