வினா விடை · பொதுத் தமிழ்
'மனோன்மணீயம்' நாடகத்தின் இடையே வரும் கிளைக்கதையின் பெயர் என்ன?
சரியான விடை: (B) சிவகாமி சரிதம்
விளக்கம்: பெ. சுந்தரனார் மனோன்மணீய நாடகத்தின் இடையே 'சிவகாமி சரிதம்' என்ற கிளைக்கதையை அமைத்துள்ளார். 'சிவகாமியின் சபதம்' கல்கி எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விருத்தப்பாவினால் அமைந்த தமிழின் முதல் காப்பியம் எது?விடை: சீவகசிந்தாமணி
- சைவத் திருமுறைகளுள் 'தேவாரம்' என்பது எவை?விடை: முதல் ஏழு திருமுறைகள்
- வீரமாமுனிவர் 'சதுரகராதி'யைத் தொகுத்த ஆண்டு எது?விடை: 1732
- தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள், நூற்பாக்கள் முறையே எத்தனை?விடை: 27; 1610
- 'பிருங்கராசம்' எனப்படும் மூலிகைச் செடி எது?விடை: கரிசலாங்கண்ணி
- பொருத்துக:<br />a) ஆளுடைய அரசு – 1. திருநாவுக்கரசர்<br />b) ஆளுடைய அடிகள் – 2. சுந்தரர்<br />c) ஆளுடைய பிள்ளை – 3. திருஞானசம்பந்தர்<br />d) ஆளுடைய நம்பி – 4. மாணிக்கவாசகர்விடை: 1 4 3 2
- சேக்கிழாரின் 'திருத்தொண்டர் புராணம்' (பெரியபுராணம்) தோன்றக் காரணமான முதல் நூல் எது?விடை: திருத்தொண்டத் தொகை
- ஐந்திலக்கணமும் கூறும் இலக்கண நூல் எது?விடை: வீரசோழியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
