வினா விடை · பொதுத் தமிழ்
“வளமை தழுவு பருதிபுரியின் மருவு குமரன் வருகவே” – இப்பாடலில் ‘பருதிபுரி’ எனக் குறிப்பிடப்படும் கோவில்
சரியான விடை: (A) வைத்தீசுவரன் கோவில்
விளக்கம்: சூரியன் (பருதி) வழிபட்ட தலமான வைத்தீசுவரன்கோவில் 'பருதிபுரி' எனப்படுகிறது; அங்குள்ள முத்துக்குமாரசாமியைப் பாடியது குமரகுருபரரின் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ். இத்தலம் புள்ளிருக்குவேளூர் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: பட்டியல் I – (a) யாணர் (b) வட்டி (c) துகிர் (d) நயனம்; பட்டியல் II – (1) பனையோலைப் பெட்டி (2) புதுவருவாய் (3) கண்கள் (4) பவளம்விடை: 2 1 4 3
- தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர் யார்?விடை: பாரதிதாசன்
- ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழ் பற்றிய கூற்றுகளில் எது தவறு?விடை: வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளிவந்தது
- ‘நகைச்சுவை’ தோன்றத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?விடை: 4
- கலம்பக நூல்களில் முதல் நூல் எது?விடை: நந்திக்கலம்பகம்
- எது சினைப்பெயர் அல்ல?விடை: பூகம்
- ‘இல்லை’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
- யாப்பு உறுப்புகள் மொத்தம்விடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
